நிருபர் தாக்குதலை கண்டித்து ஓமலூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் நிருபர் தாக்குதலை கண்டித்து ஓமலூரில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-27 16:44 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டித்து முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் செய்தியாளர்கள் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன்படி சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுகா செய்தியாளர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.