பேருந்து நிழற்குடை அமைக்க, அடிக்கல் நாட்டு - ஜோதிமணி எம்பி பங்கேற்பு

கூடலூர் மேற்கு ஊராட்சியில் பயணியர் நிழல் குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழாவில் கரூர் எம்பி ஜோதிமணி பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.

Update: 2023-11-09 01:10 GMT

அடிக்கல் நாட்டு விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் மேற்கு ஊராட்சியில் உள்ள சி. கூடலூர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-24 நிதியின் கீழ் நிழல்குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று பூமி பூஜை செய்து அதற்கான பணிகளை எம் பி ஜோதிமணி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடலூர் மேற்கு ஊராட்சி தலைவர் செந்தில், துணைத்தலைவர் நல்லசிவம், க. பரமத்தி வட்டார காங்கிரஸ் தலைவரும், முன்னூர் ஊராட்சி மன்ற தலைவருமான ராஜ்குமார், நெடுங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் நல்லசிவம்,ஆர்.எஸ் .என்  மேலாளர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News