கடையநல்லூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா !

கடையநல்லூர் பகவதி அம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது.

Update: 2024-03-29 06:03 GMT

 பகவதி அம்மன் கோயில் திருவிழா

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமிகள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அதனை முன்னிட்டு தேவர் மகாசபை தெரு பகுதிகளில் பெண்கள் அம்மனுக்கு முன்பு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தள்ளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News