காட்பாடி: மணல் கடத்தல் - 3 பேர் கைது
காட்பாடி அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்த முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-04-28 01:40 GMT
ஏழுமலை பெருமாள் பாஸ்கரன்
வேலூர் மாவட்டம் காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின்படி காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் பிரம்மபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரம்மபுரம் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்த முயன்ற ஏழுமலை ,பெருமாள், பாஸ்கரன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.