அரசியல்,சினிமா.இலக்கிய துறைகளில் சாதனை படைத்தவர் கலைஞர் - துரைமுருகன்

Update: 2023-11-26 01:40 GMT

கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 வேலூரில் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவையொட்டி கலைஞரின் சிறப்பு புகைப்படம் கண்காட்சியினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நூற்றாண்டு விழா சிறப்பு மலரை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, அமைச்சர்கள் சக்கரபாணி ,முத்துசாமி ,ஆர் .காந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கலைஞர் தொட்ட சிகரத்தை வேறு எவனாலும் தொட முடியாது. அடி முடி காணாதவர் அருணாச்சலேஸ்வரர் அதேபோலத்தான் கலைஞர் அரசியல், சினிமா. இலக்கியம் ஆகிய துறைகளில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். பண்பாடு மிக்கவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் பேரறிஞர் அண்ணா மீது மிகுந்த பற்றுடையவர் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்ற சட்டம் கொண்டு வரவும், மாநில சுயாட்சி கொண்டு வரவும், வங்கிகள் தேசிய மயமாக்க காரணமாகவும் இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வர காரணமாய் இருந்தவர் கலைஞர் கருணாநிதி, எந்த மாநிலத்திலும் கொண்டு வராத பல புதிய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் கருணாநிதி என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சச்சேனா,மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News