கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-ஆவது பிறந்தநாள் விழா
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக கொடியேற்றி இனிப்புகள், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.;
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஜூன் 3ஆம் தேதி பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள, திமுக மாவட்ட அலுவலகத்தில், கலைஞரின் உருவப்படுத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் - சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் மலர்தூவி மரியாதை செய்தனர், இதனைத் தொடர்ந்து வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் திமுக கொடியேற்றி அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில், உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவர்களுக்கு பிரட் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சிறுவயலூர் கிராமத்தில் திமுக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன தொடர்ந்து, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மகளிர் மகப்பேறு பிரிவில் உள்ள பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மதிய உணவுகள் வழங்கப்பட்டன. மேலும் பல இடங்களில் திமுக கொடியேற்றி வைத்து கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் இராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்சம்பத், நூருல்ஹிதா இஸ்மாயில், ஒன்றிய பொறுப்பாளர்கள் நல்லதம்பி, மதியழகன், ராஜேந்திரன், டாக்டர் வல்லபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் சிவசங்கர், தொ.மு.ச. பேரவை கவுண்சில் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க கமல், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் இராசா, மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் முத்துசெல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..