பாப்பினியில் கலைஞர் சேவை முகாம்

திருப்பூர் மாவட்டம் உட்பட்ட பாப்பினி கிராமத்தில் கலைஞர் சேவை முகாம்  நடைபெற்றது.

Update: 2024-03-06 02:08 GMT
கலைஞர் சேவை முகாம்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி, காங்கேயம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பினி கிராமத்தில் கலைஞர் சேவை முகாம் நடைபெற்றது. காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே. சிவானந்தன் தலைமை தாங்கி முகாமை நடத்தினார். இம்முகாமில் பாப்பினி கிராமத்தில் அனைத்து அரசு துறைகளின் சேவைகளும் ஒருங்கே கிடைக்க மக்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் கலைஞர் காப்பீட்டுத் திட்ட அட்டை பெறுதல், இலவச வீட்டு மனை பட்டா , நில வாரிய பதிவுகள், இலவச உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ சேவைகள், உடல் ஊனமுற்றோர் உதவி தொகை விண்ணப்பம், மின்சார வாரிய பெயர் மாற்ற சேவைகள், ஆதார் கார்டு திருத்தங்கள் என எண்ணற்ற சேவைகள் அரசால் வழங்கப்பட்டது.

மேலும் இந்த முகாமில் சுமார் 620 க்கும் அதிகமான பயனாளிகள் பங்கு பெற்று தங்கள் குறைகளை விண்ணப்பித்தனர். மேலும் இம்முகாமில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News