கள்ளக்குறிச்சி விஷச்சாராய பாதிப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2024-06-28 14:58 GMT

சேலம் மருத்துவமனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கோட்டை மேடு பகுதியில் கடந்த 18ம் தேதி விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு‌ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 52 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 22பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவிந்தசாமி என்பவர் சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

தற்போது சேலத்தில் 9 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 3பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News