கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; விருதுநகரில் தேமுதிக ஆர்பாட்டம்

கள்ளச்சாராயம் மரணத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து விருதுநகரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்ததுநடந்தது

Update: 2024-06-25 11:04 GMT

 தமிழ்நாட்டில் திமுக பதவி ஏற்று கடந்த நான்கு ஆண்டுகளில் கள்ளச்சாராயம் அருந்தி 80க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் கடந்த 2023 ஆம் ஆண்டில் விழுப்புரம், மரக்காணம் , செங்கல்பட்டில், கள்ளச்சாராயம் அருந்தி 30-க்கும் மேற்பட்ட பலியாகி உள்ளனர் . இந்த சம்பவம் நடந்து ஓராண்டுகள் ஆன நிலையில் மீண்டும் இந்த வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 59 பேர் பலியாகி உள்ளனர் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ச உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை பணியிடை மாற்றம் செய்தாலும் முக்கிய குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. ஆகவே தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் மேலும்இந்த சம்பவத்திற்கு தமிழக அமைச்சர் மு .க . ஸ்டாலின் பொறுப்பேற்று உடனடியாக பதவியை விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் அம்மன் கோவில் திடல் முன்பு தேமுதிக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப், கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் பாண்டி, தலைமையில், மாநில கழக செய்தி தொடர்பாளர் ராஜேந்திரநாத் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News