சேஷ வாகனத்தில் கள்ளழகர்
வண்டியூர் பகுதியில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.;
Update: 2024-04-25 01:18 GMT
வண்டியூர் பகுதியில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதுரை வண்டியூர் பகுதியில் அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை தொடர்ந்து நேற்றிரவு வண்டியூர் சென்ற அழகர் இன்று (ஏப்., 24) காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனுார் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து கருட வாகனத்தில் மதியம் மணிக்கு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கிறார். இரவு 11:00 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு சென்று அங்கு விடிய, விடிய தசாவதார அலங்காரங்கள் நடக்கின்றன.