பெரம்பலூரில் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
கல்லூரிக்கனவு என்ற நிகழ்வு நடத்தப்படுதவற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கூட்டம் நடபெற்றது.
Update: 2024-05-04 04:40 GMT
பெரம்பலூர் மாவட்டம் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரிக்கனவு என்ற நிகழ்வு நடத்தப்படுதவற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் நடைபெற்றது....... நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரிக்கனவு என்ற நிகழ்வு நடத்தப்படுதவற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மே 3ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போது, தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி பயில உள்ள மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டும் நிகழ்ச்சியாக ”கல்லூரிக் கனவு” என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் மே - 6ம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து, அரசுப்பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்று உயர்கல்விக்காக என்ன படிக்கலாம் என்பது குறித்த புரிதலை மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் கல்லூரிக்கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்வு மே 9ம் தேதி அன்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துவருதல், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உறுதி செய்திட வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்திட ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, துணை காவல் கண்காணிப்பாளர் வளவன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.