கல்வடங்கம் அங்காளம்மனுக்கு வேப்பிலை அலங்கார சிறப்பு பூஜை
சங்ககிரி அருகே வைகாசி வெள்ளியை முன்னிட்டு கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் நடந்த வேப்பிலை அலங்கார சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Update: 2024-05-17 09:22 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் வைகாசி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அதிகாலை முதலே அங்காளம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய,திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர். மலர்கள் மற்றும் வேப்பிலையால் அலங்கரித்து வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு அங்காளம்மனை வழிபட்டு சென்றனர்.