தென்சென்னை திமுக வேட்பாளரை ஆதரித்து கமலஹாசன் தேர்தல் பரப்புரை
தென் சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.;
Update: 2024-04-07 02:45 GMT
தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து கமலஹாசன் பரப்புரை
மக்கள் நீதி மையம் கட்சியின் திமுக கூட்டணியில் இணைந்த நிலையில் கட்சியின் தலைவர் கமலஹாசன் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் நேற்று தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த பரப்புரையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக கட்சியினர் மக்கள் நீதி மையம் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.