காமராஜர் படிக்கச் சொன்னார், திமுக குடிக்க சொல்கிறது -ராதிகா சரத்குமார்

காமராஜர் படிக்கச் சொன்னார், திமுக குடிக்க சொல்கிறது என தேர்தல் பிரசாரத்தின் போது ராதிகா சரத்குமார் பேசினார்.

Update: 2024-04-15 06:06 GMT

 விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் அருகே பெரிய பேராலி, சின்ன பேராலி,ரோசல்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் மற்றும் பாண்டியன் நகர் , அல்லம்பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இன்று பரப்புரை மேற்கொண்டார். விருதுநகர் லட்சுமி காலனியில் அவருக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு பரப்புரையின் போது அவர் பேசியதாவது: அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லோருக்கும் எல்லா நலம் பெற ஆரோக்கியம் ,சந்தோசம் நிம்மதி எல்லாம் வர நான் ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன். இந்த வேட்பாளராக நான் அறிமுகம் ஆகிவிட்டேன். நான் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இங்கு போட்டியிடுகிறேன் வெற்றிச் சின்னத்தில் தாமரை சின்னத்தில்.. உங்கள் பொன்னான வாக்குகளை தாமரை ஜென்மத்தில் வாக்களித்து ஒரு பெரிய வெற்றி கிட்டச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக கண்டிப்பாக ஆட்சி அமைப்பார். 400 பிளஸ் இந்தியா முழுவதும் சொல்லப்படுகிறது. 400 பிளஸ் அப்படி இருக்கும்போது அவரது கரங்களை வலுப்படுத்த தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் இன்னும் அவருக்கு Strength கொடுக்க வேண்டும். ஒரு நல்ல பிரதிநிதியாக உங்களுக்காக உங்கள் தேவைகளுக்காக உங்கள் நலனுக்காக உங்கள் வளர்ச்சிக்காக உங்கள் சமுதாயத்துக்காக நான் கண்டிப்பாக உங்களுடன் ஒரு சகோதரியாக ஒரு தோழியாக உங்களோடு நின்று தோளோடு தோளாக நின்று போராடுவேன்.

உங்கள் உரிமையை காப்பேன் என்று சொல்லி உங்கள் பொன்னான வாக்குகளை தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். செய்யக்கூடிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். செய்வோம் என்று நினைக்கிற இடத்தில் நாங்கள் இருக்கிறோம். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம் சொன்னதை செய்வோம். நாங்கள் மற்ற கட்சியைப் போல வாக்குறுதியை கொடுத்துவிட்டு செய்யாமல் இருக்க மாட்டோம் குறிப்பிட்ட பெண்களுக்கு தான் பணம் கொடுப்போம். மற்றவர்களுக்கு நாங்கள் கொடுக்க மாட்டோம் என ஏமாற்ற மாட்டோம். பொய்யைச் சொல்லி வாக்கு வாங்கி அதன் பிறகு அதன் கலரை மாற்றி விடுவார்கள். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பெருமை சேர்த்த ஊர் இது. அவர் என்ன சொன்னார் எல்லோரையும் படிக்கச் சொன்னார். ஆனால் திமுக காரர்கள் எல்லோரையும் குடிங்க குடிங்க என்று கூறுகிறார்கள். வாக்குபதிவு இயந்திரத்தில் மூன்றாவது இடத்தில் எனது சின்னம் எனது புகைப்படம் இருக்கும். எனக்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றி அடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News