ஆய்க்குடி அருகே கம்பிளி ஸ்ரீஈஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா
ஆய்க்குடி அருகே கம்பிளி ஸ்ரீஈஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சிக்குள்பட்ட கம்பிளியில், தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஈஸ்வரி அம்மன், சீவலப்பேரி சுடலைமாடன் திருக்கோயில் கொடை விழா நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு குற்றாலம் தீா்த்தம் எடுத்து வருதல்,
இரவு 10 மணிக்கு கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 30ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊா்வலமும், இரவு 10 மணிக்கு வில்லிசை குழு கச்சேரியும், இரவு 12 மணிக்கு சாமக்கொடையும் நடைபெற்றது. மே 1ஆம் தேதி காலை 10 மணிக்கு முளைப்பாரி கரைத்தல், இரவு 10 மணிக்கு கரகாட்டம் நடைபெற்றது. 2ம் தேதி மாலை 5 மணிக்கு குற்றாலம் தீா்த்தம் அழைத்து வருதல், இரவு 10 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 12 மணிக்கு சாமக் கொடையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கம்பிளி தேவேந்திரகுல வேளாளா் சமுதாயம் மற்றும் இளைஞரணியினா் செய்திருந்தனா்.