தொடக்க பள்ளி மாணவர்களை வரவேற்ற ஆட்சியர்
காஞ்சிபுரம் அருகே ஐயங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி பயில சேர்ந்த மாணவர்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வரவேற்றார்.
தமிழக முழுவதும் உள்ள அங்கன்வாடி நிறைவு செய்த மாணவ மாணவிகளை வரும் கல்வி ஆண்டுக்காக மார்ச் ஒன்றாம் தேதி முதல் அருகிலுள்ள துவக்க பள்ளிகளில் தொடக்ககல்வி பயில சேர்க்கை பணிகளை துவக்க பள்ளி கல்வித்துறை அனைத்து அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அறிவுரை செய்தது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களில் பயிலும் 3702 குழந்தைகளை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்கக் கல்வி பள்ளியில் சேர்க்கைக்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க தொடக்க கல்வி துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அப்பகுதியில் செயல்படும் நான்கு அங்கன்வாடி மையங்களில் பயிலும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்கும் பணிக்காக , இன்று முதல் கட்டமாக 24 பேர் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.
அவர்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நளினி மலர் மாலை அணிவித்து, ராஜ கிரீடம் அணிவித்து மேளதாளம் முழங்க பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இணைந்து அவர்களை வரவேற்று அவர்களுக்கு பள்ளி புத்தகங்கள் , பலகை , பென்சில், நோட்டு புத்தகங்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே இடையே உரையாற்றிய ஆட்சியர் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு ஹேப்பி என சிறுவர்கள் பதில் அளித்தனர். மேலும் அங்கன்வாடியில் கற்ற கல்விகள் குறித்து கேட்டபோது சிறுவர்கள் திருக்குறள், ஆத்திச்சூடி, பழமொழி என அனைத்தையும் தங்கு தடை இன்றி கூறி ஆட்சியரை ஆச்சிரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றது.