காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தொழிற்பேட்டையில் கள ஆய்வு

டாக்டர்பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி பிரிவில் அடிப்படை இயந்திரவியல் பயிலும் மாணவர்கள், ஓரிக்கை சிப்காட் தொழிற்பேட்டையில் கள பயணம்

Update: 2024-02-08 15:24 GMT

கள ஆய்வில் கலந்து கொண்டவர்கள் 

காஞ்சிபுரம் டாக்டர்பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி பிரிவில் அடிப்படை இயந்திரவியல் பயிலும் மாணவர்கள், ஓரிக்கை சிப்காட் தொழிற்பேட்டையில் கள பயணம் மேற்கொண்டனர்.

இதில், சிப்காட் வளாகத்தில் உள்ள, ஸ்மார்ட் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி பார்வையிட்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். நிறுவன பொறுப்பாளர்உமேஷ், இயந்திரங்கள்செயல்படும் விதம் குறித்தும்,

பாதுகாப்பாக இயந்திரங்களை இயக்குவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம், உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். தொழிற்கல்வி பயிற்றுனர் திவாகர் வரவேற்றார்.

தொழிற்கல்வி ஆசிரியர் அனந்த கிருஷ்ணன் நன்றி கூறினார். முன்னதாக பள்ளியில் இருந்து, மாணவர்கள் கள பயணம் மேற்கொண்ட வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Tags:    

Similar News