காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அறிமுக கூட்டம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அறிமுக கூட்டத்தில் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்றார்.

Update: 2024-03-23 12:55 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் அவர்கள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்று திமுக வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து எவ்வாறு கழக பணி ஆற்றிட வேண்டும் என்பது குறித்து இந்தியா கூட்டணி நிர்வாகிகள் இடையே பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அப்பொழுது காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் ஜி. செல்வம் அவர்கள் 5 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற வேண்டுமென கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர் காஸ்டன்ட்ரவீந்திரன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News