காஞ்சிபுரம் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம் !

மதுராந்தகம் தேரடி தெருவில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-27 10:05 GMT

பாமக வேட்பாளர்

மதுராந்தகம் தேரடி தெருவில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தேரடி தெருவில்,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் அவர்களை அறிமுக கூட்டம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி அவருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் பாமக மாநில வன்னியர் சங்க செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம், பாமக மாவட்ட தலைவர் குணசேகரன், பாமக நிர்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News