காஞ்சிபுரத்தில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு தேர்வு
காஞ்சிபுரம் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 34 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு இன்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 34 பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறைக்கு உறுதுணையாக சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து ஓழுங்கு செய்தல் , விழா காலங்களில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கபட்டு , விண்ணப்பங்கள் பெறப்பட்டுது.
இத்தேர்வில் ஊர்க் காவல் படை டிஜிபி வன்னிய பெருமாள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோரின் ஆலோசனையின்படி , இன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரை, காஞ்சிபுரம் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஆட்கள் தேர்வு நடைபெற்றது.
இதில் தலைநகர கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, ஏ.ஆர்.டி.எஸ்.பி.சுரேஷ்குமார், ஊர் காவல் படை மண்டல தளபதி முனைவர் ஜே.மேரி ஸ்டெல்லா, துணை மண்டல தளபதி கோ. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்தனர்.இந்த ஊர் காவல் படை தேர்வுக்கு 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்க்காவல் மண்டல தளபதி முனைவர் ஜே. மேரி ஸ்டெல்லா கூறும் போது 'காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் வன்னிய பெருமாள் ஆகியோரின் ஆலோசனையின்படி நடைபெறும் இந்த ஊர்க்காவல் படை ஆட்கள் தேர்வில் எவ்வித ஒளிவு, மறைவுமின்றி நேர்மையான முறையில், 34 காலி இடங்களுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யவுள்ளோம் என கூறினார்.