காஞ்சிபுரம் மாணவர்கள் சிலம்பத்தில் முதலிடம்
காஞ்சிபுரம் மாணவர்கள் சிலம்பத்தில் முதலிடம் பிடித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-31 09:55 GMT
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
நேஷனல் சிலம்பம் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், கடலுார் மாவட்டம், டவுன் ஹாலில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நேற்று முன்தினம் நடந்தது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவர் - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட பாரம்பரிய சிலம்பம் சங்கம் சார்பில், மாஸ்டர் அஸ்வின் தலைமையில் பங்கேற்ற சிலம்ப மாணவர்கள் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, ஒற்றை சுருள்வாள், இரட்டை சுருள்வாள், மான் கொம்பு பிரிவு ஆகிய போட்டிகளில் கோப்பையை வென்று, தமிழகத்திற்கு முதல் பரிசை பெற்று தந்தனர்."