காஞ்சிபுரம் வரதர் பார்வேட்டை பழையசீவரத்தில் வெகுவிமரிசை

காஞ்சிபுரம் வரதர் பார்வேட்டை பழையசீவரத்தில் வெகுவிமரிசை நடைபெற்றது.;

Update: 2024-01-18 14:17 GMT

உற்சவத்தில் கலந்து கொண்டவர்கள்

காஞ்சிபுரம் பாரத ஸ்டேட் வங்கி குடியிருப்பு, வாலாஜாபாத், புளியம்பாக்கம் சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் மண்டக படிகள் நடந்தன. நேற்று, பழையசீவரம் மலை மீது, உற்சவ மண்டபத்தில், வரதர் எழுந்தருளினார்.

பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று, வரதரை தரிசனம் செய்தனர். இதையடுத்து, மாலை 5:00 மணி அளவில், மலையில் இருந்து இறங்கி, லட்சுமி நரசிம்மர் கோவிலை வந்தடைந்தார். அங்கு, சிறப்பு திருமஞ்சனத்திற்கு பின் பார்வேட்டை உற்சவம் நடந்தது.

Advertisement

லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருந்து, வரதர் மற்றும் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பட்டுதிருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்றனர். அங்கு, சிறப்பு திருமஞ்சனத்திற்கு பின் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன.

இதையடுத்து, நேற்று இரவு, அவளூர், அங்கம்பாக்கம், நெய்குப்பம், வில்லிவலம் ஆகிய பகுதிகளில் மண்டக படிக்கு பின், இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், கோவிலுக்கு வந்தடைய உள்ளார்."

Tags:    

Similar News