தொழிற்சாலை ஊழியர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு

காங்கேயம் அருகே வட்டமலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-26 02:58 GMT
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கேயம் பகுதியில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் 100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி காங்கேயம் வட்டமலை பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.  தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கைப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வேலை ஆட்களுக்கு வழங்கப்பட்டது.‌ இந்நிகழ்வில் காங்கயம் வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் கலந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News