பிளாட் விற்பனை மோசடி - எஸ்பியிடம் புகார்

சுசீந்திரம் அருகே பிளாட் விற்பனை என்ற பெயரில் மோசடி செய்தவரிடமிருந்து தங்களது பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.

Update: 2024-03-21 05:19 GMT

மனு அளிக்க வந்தவர்கள் 

கன்னியாகுமரி மாவட்டம் கீழராமன்புதூர் பகுதியை சேர்ந்த சுமேஷ் (41) உட்பட அவரது சகோதரர்கள் சுபாஷ், சுரேஷ் உட்பட சிலர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-       சுசீந்திரம் அருகே அங்கீகாரம் பெற்ற மனைகள் விற்பனைக்கு என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. உடனே நாங்கள் ஒரு சென்டுக்கு 1.25 லட்சம் என்ற அடிப்படையில் பேசி, எங்களின் சிலர் 10 சென்ட், 5 சென்ட்  வீதம் வாங்குவதற்காக முடிவு செய்து பணம் கொடுத்தோம்.     சிலர் முன்பணம் மட்டும் கொடுத்திருக்கிறோம். சிலர் அவர்கள் வாங்க விரும்பிய நிலத்திற்கான முழு தொகையும் செலுத்தியுள்ளனர். ஆனால் பணம் பெற்றுக் கொண்ட நபர்கள் தற்போது எழுதி தராமல் ஏமாற்றி வருகிறார்கள்.  

   இது குறித்து விசாரித்த போது, இந்த நிலத்தின் ஒப்பந்தத்தின்படி அந்த சொத்துக்களை சார் பதிவாளர் அலுவலகம் மூலம் பதிவு செய்ய இயலாது எனவும், அரசு ஆணைபடி மனை பிரிவுகள் செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.   எனவே எங்களது பணத்தை திருப்பி தரும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் தொலைத்து விடுவதாக எங்களை மிரட்டி வருகிறார்கள்.  எனவே எங்களுக்கு அந்த பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறி உள்ளார்கள்.

Tags:    

Similar News