கன்னியாகுமரி : ரூ. 26.97 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி..!

கன்னியாகுமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 27 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

Update: 2023-10-29 02:57 GMT

குமரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இன்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரீதர் வரவேற்றார். சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது முன்னிலை வகித்தார். விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 27 ஆயிரம் கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- நாடே திரும்பி பார்க்கிற வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1000 டெபிட் கார்டுகள் மற்றும் 255 மகளிர் சுயதவிக்குழுக்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்து சகோதரிகளுக்கு ரூ.27 கோடி அளவில் கடனுதவி வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட 2 லட்சத்து 82 ஆயிரம் பேர் பயன் பெற்று உள்ளனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டது, இதுவே முதல்முறை.  பயன்பெற்ற பயனாளிகள் அனைவரும் தமிழ்நாடு அரசின்  சாதனைகளை எடுத்துச் சொல்ல நீங்கள் ஒவ்வொருவரும்  தூதுவர்களாக மாறிட வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News