ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதிய நல மீட்பு சங்க சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-19 08:55 GMT
கையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் போராடிய ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள்

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி உயர்வினை வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், 92 ஆயிரம் ஓய்வுதிகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதிய நல மீட்பு சங்க சார்பில் நேற்று தேர்தலை புறக்கணிப்பதாக கூறி,கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஊர்வலமாக செல்லும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு சங்க மண்டல தலைவர் விஜயகுமார், மாநில அமைப்பு செயலாளர் அய்யாதுரை, தலைமையில் ஏராளமானோர் வாக்காளர் அடையாள அட்டையை கையில் ஏந்தியவாறு நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

Tags:    

Similar News