விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வு  போட்டி - ஆட்சியர் அறிக்கை 

கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

Update: 2024-05-01 06:27 GMT
கலெக்டர் ஸ்ரீதர்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி,  தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் , விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.        2024-2025-ஆம் ஆண்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில அளவிலான தேர்வுகள் சென்னையில் வருகிற 7-ம் தேதி நடக்கிறது. பங்கேற்க விரும்பு மாணவர்கள் 6-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் 7, 8 ,9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர மாவட்ட தேர்வுகள் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 10-ம் தேதி காலை 7:00 மணிக்கும்,  பெண்களுக்கு 11ஆம் தேதி நடக்கிறது. முன்னதாக 8-ம் தேதியே பதிவு செய்ய வேண்டும்.       விளையாட்டு விடுதி மாநிலத்தில் அளவிலான நேரடி தேர்வு சென்னையில் 13-ஆம் தேதி நடக்கிறது. பெண்களுக்கு 14 ஆம் தேதி நடக்க உள்ளது. சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள் 6 -ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது.  போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் 5 -ம் தேதி மாதத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.  மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசி 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.   மேலும் மாவட்ட அளவிலான தேர்வில் தேர்வுசெய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.     விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ / மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் 26.04.2024 முதல் www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்லைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News