அமித்ஷாவிற்கு கொடுத்து வைக்கவில்லை - கார்த்தி சிதம்பரம்

காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த அமித்ஷாவின் ரோட் ஷோ நிகழ்ச்சியினை ரத்து செய்ததன் மூலம் மீண்டும் செட்டிநாட்டு விருந்தோம்பலை பெரும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போய்விட்டதாக கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

Update: 2024-04-11 10:49 GMT

கார்த்திக் சிதம்பரம் 

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் கார்த்திக் சிதம்பரம் பரப்பரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த அமித்ஷாவின் ரோட் ஷோ நிகழ்ச்சியினை ரத்து செய்ததன் மூலம் மீண்டும் செட்டிநாடு விருந்தோம்பலை பெரும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாகவும், அமிர்ஷா திருமயம் கோட்டை முனீஸ்வரர் கோயிலுக்கு சென்றாலும் அது நான் வணங்கும் தெய்வம், அது என்னை கைவிடாது என்றார்.

மோடி வாரிசு அரசியல் குறித்து பா.ம.க.வை மனதில் வைத்துக்கொண்டு திமுகவை விமர்சித்துள்ளார். பாஜகவிற்கும், அதிமுகவிற்கும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, கூட்டணி இருந்தாலும் எனக்கு ஒன்றும் கவலை இல்லை. எங்களது கூட்டணி கட்சியினரின் திட்டங்களை எடுத்துக் கூறி மக்களிடம் வாக்குகளை சேகரிப்பதில் முனைப்பாக இருக்கிறோம். மக்களிடத்தில் எதிர்ப்புகள் இல்லை. அனைத்து பகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு செல்வேன். வெளியூரியிலிருந்து வந்து என்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் சுற்றுலாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் தேர்தல் முடிந்தவுடன் வெளியூர் சென்று விடுவார்கள். கல்விக்கடன் கொடுத்து மாணவர்களை கடனாளி ஆக்கிவிட்டார் என தேவநாதன் புரிதல் இல்லாமல் கூறி வருகிறார் என பேசினார்

Tags:    

Similar News