கார்த்திகை 1 : முடவன்முழுக்கில் புனித நீராடிய பக்தர்கள்

மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி, துலாக்கட்டக் காவிரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.;

Update: 2023-11-17 08:02 GMT
புனித நீராடிய பக்தர்கள் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள், ஐப்பசி மாதம் முழுவதும், காவிரியில் நீராடி, இறைவனை வழிபட்டு, தங்கள் பாவத்தை போக்கியதாக புராணம் கூறுகிறது. அதன்படி, காவிரியில் ஐப்பசி மாதம் நீராட விரும்பிய, உடல் ஊனமுற்ற ஒரு பக்தர், ஐப்பசி மாதத்திற்குள், மயிலாடுதுறை காவிரிக்கரைக்கு வரமுடியவில்லை. அந்த பக்தருக்காக மனம் இரங்கிய இறைவன், முடவனுக்கு ஐப்பசி மாதம் முடிந்த மறுநாள், கார்த்திகை 1ஆம் தேதி, காவிரியில் நீராடிய பலனை அளித்தார். அதன்படி, ஆண்டுதோறும், ,கார்த்திகை 1ம் நாள், முடவன் முழுக்கு, ஐதீக திருவிழான தீர்த்தவாரி. இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து மனோன்மணி உடனாகிய சந்திரசேகர சுவாமி காவிரி துலாக்கடத்திற்கு எழுந்தருளினார். அங்கு அஸ்திர தேவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
Tags:    

Similar News