ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல்!
கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல் மக்கள் மத்தியில் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்தார்.
Update: 2024-04-06 07:40 GMT
காவிரி குடிநீருக்காக பாராளுமன்றத்தில் எவ்வாறு பேசுவீர்கள் என்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கேட்டதற்கு மக்கள் மத்தியில் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்த கரூர் அதிமுக வேட்பாளர் தங்கவேல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அகரப்பட்டியில் ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்தார்,மேலும் ஆண் குழந்தைக்கு விஜயபாஸ்கர் என்று பெயரிட்டு வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்தார். மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் பம்பரமாய் சுழன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிக்கு வருகை தந்த கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்த முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அகரப்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது குடிநீர் பிரச்சினை தொடர்ந்து இருப்பதாக அந்த பகுதி மக்கள் வலியுறுத்ததை தொடர்ந்து ஹிந்தியில் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவன் என்று உறுதியளித்தார்.