கரூர் மாவட்டத்தில் 48 மில்லி மீட்டர் மழை பதிவு
கரூர் மாவட்டத்தில் 48 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவமழை துவங்கிய போதும்,வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதேசமயம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் நேற்றும் கரூர் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், இரவு நேரத்தில் பரவலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.
மழை பெய்த நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அந்த அறிவிப்பின் படி கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக குளித்தலையில் 18.2 மில்லி மீட்டரும், தோகை மலையில் 4.2 mm, கிருஷ்ணராயபுரத்தில் 4.4 மில்லி மீட்டரும், மாயனூரில் 7 மில்லி மீட்டரும் ,பஞ்சப்பட்டி 14.2 மில்லி மீட்டர் என மொத்தம் 48 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு நான்கு மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.