இழப்பீடு கேட்டு 2ம் நாளாக உண்ணாவிரதம் - ஆதரவு தெரிவித்த ஈசன் முருகசாமி.

விவசாய நிலங்கள் உயர் மின்கோபுரம் அமைத்ததற்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி நேரில் சந்தித்து ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

Update: 2024-04-22 04:51 GMT

 கரூர் மாவட்டம், ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரைத்தோட்டம் வரை 110 கேவி தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட பாதை செல்லும் வழியில் அமைக்கப்பட்ட, மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீட்டை வழங்காததை கண்டித்து, கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா தலைமையில், அவரது தோட்டத்தில் விவசாயிகள் கோரிக்கையை முன்னெடுத்து உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது

. போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து இருந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரடியாக சந்திப்பதற்காக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் ஆர் யூ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, உண்ணாவிரத பந்தலில் கலந்து கொண்டு, உண்ணாவிரதம் இருந்த விவசாயிகளிடம் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

Tags:    

Similar News