கரூர் : அமராவதி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
கரூரில், அமராவதி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.;
Update: 2023-12-22 02:27 GMT
அமராவதி ஆறு
அமராவதி அணை நீர்மட்டம் உயர்ந்து நிரம்பும் நிலையில் உள்ளதால், அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது, கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றுக்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அமராவதி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 1,392-கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 417 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 89.18 அடியாக இருந்தது. மேலும், அமராவதி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேசமயம், அணை நிரம்பும் நிலையில் உள்ள நேரத்தில், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ஒருவேளை அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்தால், ஆற்றில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பாக அமையும். தற்போது, அமராவதி ஆற்றில் கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீரும், நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை நீரும் வந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் ஆற்றை வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.