கரூர், தாந்தோணி மலையில் நாளை மின் தடை

கரூர் மற்றும் தாந்தோணி மலை துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய பொறியாளர் கணிகை மார்த்தாள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2024-01-19 03:19 GMT

மின் தடை 

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை ஜனவரி 20ஆம் தேதி கரூர் மற்றும் தாந்தோணி மலை துணை மின் நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார். கரூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, எல் ஜி பி நகர், ராமானுஜர் நகர், கோவை சாலை, பாரதி நகர், மதுரை பைபாஸ், சேலம் பைபாஸ், எம்ஜிஆர் நகர், வையாபுரி நகர் நான்காவது கிராஸ் பகுதிகளிலும், தாந்தோணி மலை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, ராயனூர், பொன் நகர், மீனாட்சி கல்லூரி, அருகம்பாளையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை ஜனவரி 20-ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, தங்களது பணிகளை முடித்துக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

Tags:    

Similar News