அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் கவி அருவி - சுற்றுலா பயணிகள் அவதி
அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Update: 2023-12-17 12:19 GMT
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது குரங்கு அருவி எனும் கவி அருவி.இந்தக் கவி அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில் கவி அருவியில் குளிப்பதற்கு நபர் ஒன்றிற்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் இங்கு கழிப்பிடம்,உடைமாற்றும் அறை உள்ளிட்டவைகள் சுகாதாரம் இன்றி இருப்பதாகவும் முறையாக செயல்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.மேலும் இங்கு தடுப்புக்காக அமைக்கப்பட்ட கம்பிகள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மீதம் உள்ள ஒரு சில இரும்பு தடுப்பு கம்பிகள் சிதலம் அடைந்த நிலையில் காணப்படுகிறது.பராமரிப்பின்றி உள்ள கவி அருவியை சுற்றியுள்ள நீர்வழி பாறைகளில் வழுக்கி சுற்றுலா பயணிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கவி அருவிக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.