பள்ளிகள் திறக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்படும் கீழடி அருங்காட்சியகம்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கீழடி அருங்காட்சியகம், வெறிச்சோடி காணப்பட்டது

Update: 2024-06-15 05:50 GMT

கீழடி அருங்காட்சியகம்

. கீழடியில்  2600 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்ட மக்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்கள் மத்திய, மாநில தொல்லியல் துறை அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டது. கீழடியில் இரண்டு ஏக்கரில் பத்து கட்டட தொகுதிகளுடன் அருங்காட்சியகம் கட்டப்பட்டு அதில் 13 ஆயிரத்து 834 பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டு மார்ச்சில் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தை தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் வெகு வாக குறைந்து விட்டது. தினசரி 500க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். பள்ளி திறப்பு ஒரு காரணமாக இருந்தாலும் வெயிலின் தாக்கம் கடுமையாகஉள்ளது. இதனாலேயே பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Tags:    

Similar News