துர்க்கை அலங்காரத்தில் கெங்கையம்மன் வீதி உலா
சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் உற்சவர் மேளதாளங்களுடன் வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-05-25 10:08 GMT
வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு அணிவித்தலுடன் தொடங்கியது. 2 மற்றும் 3-வது நாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. 4-வது நாளில் மறுகாப்பு அணிவித்தல் மற்றும் உற்சவர் கெங்கையம்மனுக்கு துர்க்கை அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்களுடன் வீதி உலா நடந்தது.
பக்தர்கள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) புஷ்ப பல்லக்கு மற்றும் 29-ந்தேதி (புதன்கிழமை) தேர் திருவிழாவும், சிரசு ஏற்றம் விஸ்வரூப காட்சி தரிசனமும் நடக்கிறது. நேற்றைய உற்சவ ஏற்பாடுகளை பெரியவீடு வகையறாவினர் செய்து இருந்தனர்.