கெங்கவல்லி: கவுன்சிலர்கள் வராததால் ஒன்றியக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். தலைவராக பிரியா இருந்து வருகிறார். இந்நிலையில், ஒன்றியக்குழு துணைத்தலைவர் விஜேந்திரன் தலைமையில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 9 பேர் கையெப்பமிட்டு ஒன்றியக்குழு தலைவர் பிரியா மீது சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இது குறித்த புகார் மீது விசாரணை மேற்கொண்டு அறிக்கை தருமாறு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். அதன்பேரில், நவம்பர் 14ம் தேதி முதல் 7 நாளுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி ஒன்றியக் குழு தலைவர் பிரியாவுக்கு, ஆத்தூர் ஆர்டிஓ ரமேஷ் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பிரியா தலைமை வகித்தார். ஆணையாளர் பரமசிவம், தாமரைச் முன்னிலை வகித்தனர். அதிமுக கவுன்சிலர்களில் சாமிநாதன் மட்டும் பங்கேற்ற நிலையில், துணைத்தலைவர் உள்ளிட்ட 9 ஒன்றிய கவுன்சிலர்களும் புறக்கணித்தனர். இதனால், சுமார் ஒரு காத்திருந்து யாரும் வராததால், ஒன்றிய ஆணையாளர் பரமசிவம், தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். வரும் 18ம் தேதி(திங்கட்கிழமை) ஆர்டிஓ தலைமையில் ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் ஒன்றியக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.