கேரளா அரசு பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்

விபத்து தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், கேரளா அரசு பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில் வழங்கி, இரணியல் குற்றவியல் நடுவர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2024-03-02 03:30 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் உதயசிம்மன், பரிசேரியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பைக்கில் தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.       சுங்கான் கடை பகுதியில் வந்த போது,  திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த  கேரளா அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் உதயசிம்மன் உயிரிழந்தார்.

பலத்த காயவடந்த ஜெயக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.       இது குறித்து ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில், நீதிபதி அமீர்தீன் தீர்ப்பு வழங்கினார்.        அதில் விபத்தை ஏற்படுத்தி இறப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காக கேரளா அரசு பஸ் டிரைவர் தேவசான் என்பவருக்கு  இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 12 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரேவதி வாதாடினார்.

Tags:    

Similar News