கிக் பாக்ஸிங்கில் பதக்கம் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடந்தது.
கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கம் பெற்றவர்களுக்கு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா. சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழக அரங்கில் கடந்த 3,4,5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் கரூர் மாவட்ட அணி வீரர்கள்5 தங்கப் பதக்கம்,5 வெள்ளி பதக்கம், 6 வெண்கலப்பக்கம் உட்பட மொத்தம் 16- பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் உமா சங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பாராட்டினர். கரூர் அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்க செயலாளர் ரவிக்குமார், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முதல் இடம் பிடித்த ஐந்து மாணவர்கள் இம்மாத இறுதியில் புனே-வில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.