செய்யாறு அருகே மாணவி கடத்தல்!
செய்யாறு அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் மீது புகார் அளிக்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-09 11:03 GMT
மாணவி கடத்தல்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி பிளஸ்-2 இறுதித்தேர்வை எழுத சென்ற மாணவி இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து விசாரித்தபோது ஆட்டோ டிரைவர் பொன்னம்பலம் (வயது 23),அவரது சகோதரர் கோட்டி, நண்பர் மாதவன் ஆகியோர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து மோரணம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.