மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

காரியாபட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2024-05-17 06:43 GMT

முத்தம்மாள் 

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் முத்தம்மாள் (75).  இவரது கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று வீட்டில் தனிமையாக இருந்து டிவி பார்த்து கொண்டிருந்த முத்தம்மாளை அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டு யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி முத்தம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்து கழுத்தில் இருந்த தங்கச் செயின் மற்றும் தண்டட்டியை பறித்து தப்பியோடி விட்டனர்.

Advertisement

இந்த நிலையில் அப்போது முத்தம்மாள் பேத்தி ஒருவர் வீட்டிற்குள் சென்ற போது பாட்டி முத்தம்மாள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்களிடம் தகவல் கொடுத்துள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் மூதாட்டி முத்தம்மாளை பார்த்த போது பின் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிய நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி, தலைமையிலான போலீசார் உயிரிழந்த முத்தம்மாள் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடையவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, காவல்துறை கண்காணிப்பாளர்கள் காயத்ரி, ஜெகநாதன்,தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News