ஊராட்சி தலைவருக்கு கத்தி குத்து - உறவினர்கள் கைது

அண்ணன், தங்கை முறையில் திருமணம் செய்துகொண்டதை தட்டிகேட்ட பருத்திப்பள்ளி பஞ்சாயத்து தலைவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-14 09:15 GMT

கதிர்வேல்

மல்லசமுத்திரம் அருகேயுள்ள, சோமணம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல்49. அ.இ.அ.தி.மு.கட்சியை சேர்ந்த இவர் பருத்திப்பள்ளி கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அதே ஊரில் வசிக்கும் அவரது உறவினர்களான செல்வராஜ்33, கெளதமி27 ஆகியோர் கடந்த 11ம்தேதி திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அண்ணன், தங்கை முறை ஆவதால் தவறான முறையில் நீங்கள் திருமணம் செய்துள்ளீர்கள் என கதிர்வேல் செல்வராஜை திட்டியுள்ளார்.

இதனால், மனமுடைந்த செல்வராஜ் உறவினர்களான எடப்பாடி குள்ளம்பட்டியை சேர்ந்த மூர்த்தி28, வேலணம்பட்டியை சேர்ந்த சரண்குமார்17, வட்டூரை சேர்ந்த கொடியரசன்28 ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு 10மணியளவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பஞ்சாயத்து தலைவர் கதிர்வேலிடம் தகராறு செய்து, கொடியரசன் என்பவர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கதிர்வேலின் வலதுதோல்பட்டையில் குத்தியுள்ளார். சுமார் ஒரு சென்டிமீட்டர் ஆழத்திற்கு கத்தி இறங்கியுள்ளது. இதில், பலத்த காயம் ஏற்பட்ட அவர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எலச்சிபாளையம் போலீசார் இதுசம்மந்தமாக வழக்கு பதிவு செய்து மூர்த்தி, சரண்குமார், கொடியரசன் ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News