கொடைக்கானல்: காட்டெருமையின் வைரல் வீடியோ
பிரதான சாலையின் ஓரத்தில் சென்ற தண்ணீரை நிதானமாக அருந்திய ஒற்றை காட்டெருமையின் வீடியோ வெளியாகியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-08 16:25 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டெருமைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுவதும், நகர்ப்பகுதிகளில் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.
மேலும் காட்டெருமைகள் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்குவது வாடிக்கையாக உள்ளது, இதனையடுத்து இன்று அதிகமாக மக்கள் கூடும் இடமான மூஞ்சிக்கல் பிரதான சாலையில் ஒற்றை காட்டெருமை உலா வந்தது, சாலையின் ஓரத்தில் இருந்து வெளியேறி சென்ற தண்ணீரை நிறுத்தி நிதானமாக அருந்தி சென்றது.
மேலும் தற்போது இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது,