கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோலாட்டம் ஆடி விழிப்புணர்வு

திருப்பத்தூர் அடுத்த கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோலாட்டம் ஆடி 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-30 09:51 GMT

வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் மகளிர் திட்டத்தின் சார்பில் கோலாட்டம் ஆடி 100% வாக்களிப்பது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்து கிராமிய கலைக் குழுவினர்கள் கோலாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதனைத் தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பலகையில் கையெழுத்திட்டார்.

வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தினர். தேர்தல் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News