கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் 1359 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்றது..
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவில் தூக்கத் திருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை இல் கலந்து கொள்ள 1359 பேர் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து வழக்கமான பூஜைகள் முடிந்து தூக்கக்காரர்கள் அம்மன் சன்னதியில் முட்டுக் குத்தி நமஸ்காரம் செய்தனர். தொடர்ந்து அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருள பெண்கள் குரவையிட தூக்க நேர்ச்சை தொடங்கியது.முதலில் நான்கு அம்மன் தூக்கம் நடந்தது.
அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான நேர்ச்சை தூக்கம் நடைபெற்றது. தூக்க வில்லானது ஒருமுறை கோவிலை சுற்றி வரும் போது நான்கு தூக்க நேர்ச்சை நிறைவடைந்தது. வில்லானது ஒரு மணி நேரத்தில் 17 முறை கோவிலை சுற்றி வந்தது. அதன்படி ஒரு மணி நேரத்தில் 68 தூக்க நேரத்தைகள் நிறைவடைந்தது. இந்த தூக்கணர்ச்சை விழா நேற்று பகல் மற்றும் இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்துள்ளனர்.