கொங்கு பண்பாடு கலாச்சார பவளக்கொடி கும்மியாட்டம்
கொங்கு பண்பாடு கலாச்சார பவளக்கொடி கும்மியாட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-17 15:04 GMT
வள்ளி கும்மியாட்டம்
ஒட்டன்சத்திரம் அருகே கொங்கு பண்பாடு கலாச்சார பவளக்கொடி கும்மியாட்டம் 66 ஆவது அரங்கேற்றம் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆடி அசத்திய 200 க்கும் மேற்பட்ட பெண்களால் கண் கவரும் நிகழ்ச்சி நடந்தது. இது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் -தாராபுரம் சாலையில் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஜெயம் திடலில் மனவளக்கலை மன்ற பெரியோர்காளாலும் .. கொங்கு நாட்டின் பரம்பரிய கும்மியாட்டத்தின் பவளக்கொடி கும்மியாட்டம் குழுவினரின் 66-வது அரகேற்ற நிகழ்ச்சி இத்திடலில் நடந்தது. 200க்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கொட்டும் மழையில் கும்மியாட்டம் ஆடி அசத்தினார்கள்.