கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா வெகு விமர்சையாக நடந்தது.

Update: 2024-05-29 16:06 GMT

காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா வெகு விமர்சையாக நடந்தது.


ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து சிரசு ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மன் சிரசு ஏற்றம், அக்னி சட்டி, கரகம் எடுத்தல், முள் அணிதல் நடந்தது. பக்தர்கள் தேர் இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து மதியம் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலையில் அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் பக்தர்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி வந்து அம்மனுக்கு மாலை அணிவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவில் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் அம்மன் வீதிஉலா, மற்றும் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News