கொப்பரை தேங்காய் ஏலம்
சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் 2 லட்சத்துக்கு ஏலம் போனது.
Update: 2024-03-13 09:18 GMT
சேலம் அருகே உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் இணையதளம் வழியாக நடந்தது. வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.
கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.62 பைசாவுக்கும், அதிகபட்சமாக ரூ.85 பைசாவுக்கும் விற்பனையானது. மொத்தம் 3.42 டன் அளவுள்ள 99 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்இதுகாணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.