கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் ஆண்டு விழா கொண்டாட்டம்

காட்டிநாயனப்பள்ளியில் கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-03-23 17:02 GMT

ஆண்டு விழா 

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியி, கல்வியியல் கல்லூரிகளில் இன்று ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவை கல்லூரி தாளாளர் முன்னாள் எம்.பி பெருமாள், தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் திருமதி வள்ளி பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நிர்வாகி திரு குமார், கல்வியியல் கல்லூரி முதல்வர் திருமதி அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்வர், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் எஸ்ஆறுமுகம் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் திரு அறிவழகன் அனைவரையும் வரவேற்றார். தாளாளர் தனது தலைமை உரையில் மாணவர்களின் பன்முக திறமையை வெளிக்காட்டும் நிகழ்வாக ஆண்டுவிழா அமைய வேண்டும். சமூக அக்கறையுடன் கூடிய கல்வியை கற்க வேண்டும். புதிய தொழில்துட்பங்களை பயில வேண்டும். மாணவிகள் விழிப்புடன் இருந்து, மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்றவாறு புதியதாக கற்க வேண்டும் என வாழ்த்தினார். ஊத்தங்கரை எம் எல் ஏ திரு தமிழ்செல்வம், பர்கூர் முன்னாள் எம் எல் ஏ திரு ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் திரு ஜெயபால், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, காட்டிநாயனப்பள்ளி தலைவர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தாளாளர் பெருமாள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். விளையாட்டு போட்டி, பல்கலைக்கழக தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், தடகள போட்டியில் இந்திய அளவில் தேர்வாகி சிறப்பிடம் பெற்ற மாணவன் சுந்தர் உள்ளிட்ட மாணவர்களுக்கு, பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தினர். தொடர்ந்து மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. துறைத்தலைவர்கள் மாணவிகள் பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர் திரு சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News